தமிழக விவசாயிகள் நலன் காக்கும் மத்திய பட்ஜெட் 2026 - நயினார் நாகேந்திரன்

விவசாயிகளும் பலன் பெறும் சிறப்பு மிக்க அறிவிப்பை அறிக்கையில் வெளியிட்டுள்ள மத்திய அரசுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகள் நலன் காக்கும் மத்திய பட்ஜெட் 2026 - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நாடு முழுவதுமுள்ள ஒரு கோடி தென்னை விவசாயிகளுக்குப் பலனளிக்கும் வகையில், தேங்காய் விளைச்சலை ஊக்குவித்து, உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டத்தை மத்திய நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளது வரவேற்பிற்குரியது.

அதே போல, 2030-ஆம் ஆண்டுக்குள் இந்திய முந்திரியை உயர்மதிப்புமிக்க உலகளாவிய பிராண்டாக (Premium global brand) மாற்ற முயற்சி எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.

கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த தென்னை விவசாயிகளும், கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த முந்திரி விவசாயிகளும் பலன் பெறும் இத்தகைய சிறப்பு மிக்க அறிவிப்பை மத்திய நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டுள்ள நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றி!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com