குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு மத்திய அரசு உருப்படியாக எந்த உதவியும் செய்யவில்லை: ப.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு மத்திய அரசு உருப்படியாக எந்த உதவியும் செய்யவில்லை: ப.சிதம்பரம்
Published on

தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடந்த சில ஆண்டுகளில் நசிந்து இப்பொழுது குலைந்து விட்டன இதற்கான ஆய்வில் கலந்து கொண்ட 2029 நிறுவனங்களில் பெரும்பான்மையான நிறுவனங்கள் நட்டமடைந்து

கணிசமான எண்ணிக்கை நிறுவனங்கள் மூடப்பட்டன. 50 சதவீத வேலைகள் காலியாக உள்ளன. அவற்றில் பணியாற்றியவர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். மத்திய அரசு உருப்படியாக எந்த உதவியும் செய்யவில்லை. இ.சி.எல்.ஜி.எஸ். திட்டம் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. குறு, சிறு தொழில்களுக்கு கடன் கொடுத்து அவர்களை மீட்பதற்கு வங்கிகள் தயங்குகிறார்கள். அரசின் பேச்சு அதிகம், செயல்பாடு குறைவு என்பதை இந்த ஆய்வு தெளிவாக புலப்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com