வெளியுறவு கொள்கையிலும் பெயிலியர் மாடல் என பெயரெடுத்துள்ள மத்திய அரசு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொலைநோக்கு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.
வெளியுறவு கொள்கையிலும் பெயிலியர் மாடல் என பெயரெடுத்துள்ள மத்திய அரசு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

வெளியுறவுக் கொள்கையிலும் #FailureModel எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொலைநோக்கு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. பொதுமக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை.

இதனைக் கண்டித்து, தமிழ்நாடெங்கும் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். களத்தில் தகிக்கும் மக்களின் கோபத்தை உணர்ந்து, ஒன்றிய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்திட முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com