தமிழகத்துக்கு 3 மடங்கு நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது - பிரதமர் மோடி


தமிழகத்துக்கு 3 மடங்கு நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது - பிரதமர் மோடி
x

ராமேசுவரத்துக்கான இந்த புதிய பாம்பன் ரெயில் பாலம் தொழில் நுட்பத்தையும் பாரம்பரியத்தையும் ஒன்று சேர்க்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

என் அன்பு தமிழ் சொந்தங்களே, இன்று ராமநவமி, இது ஒரு பவித்திரமான நாள். தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது. ராமேசுவரம் என்ற இந்த புண்ணிய பூமியிலிருந்து இந்திய மக்கள் அனைவருக்கும் ராம நவமி தின வாழ்த்துகள்.

ராமநாத சுவாமி கோவிலில் இன்று வழிபட்ட போது ஆசிகல் நிரம்ப பெற்றவனாக நான் உணர்ந்தேன். இந்த விஷேச நாளில் ரூ. 8300 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அற்பனிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த ரெயில் மற்றும் சாலை திட்டங்கள் தமிழ்நாட்டிலே இணைப்புத்திரனை வலுப்படுத்தும். இந்த திட்டங்களை பொருத்து தமிழ்நாட்டின் என் சகோதர சகோதரிகளுக்கு நான் என வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இது பாரத ரத்னா கலாம் அவர்களின் பூமி அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றை ஒன்று நிறைவு செய்வவை என்பது அவரின் வாழ்வு நமக்கு காட்டுகிறது. அதே போல ராமேசுவரத்துக்கான இந்த புதிய பாம்பன் பாலமும் கூட தொழில் நுட்பத்தையும் பாரம்பரியத்தையும் ஒன்று சேர்க்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பலமையான ஒரு நகரம் 21ம் நூற்றாண்டின் ஒரு பொறியியல் அற்புதத்தால் இன்று இணைக்கப்படிருக்கிறது. தங்களது தீவிரமான உழைப்பிற்காக நான் நமது பொறியாளர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசை விட தமிழ்நாட்டுக்கு அதிக நிதி தந்துள்ளோம். மத்திய அரசு அனைத்தும் செய்தும் கூட சிலர் தமிழகத்தில் அழுது கொண்டே இருக்கிறார்கள். பாஜக ஆட்சியில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story