சென்னையில் உற்பத்தியான 45 டன் ஆக்சிஜனை ஆந்திரா, தெலுங்கானாவுக்கு அனுப்பிய மத்திய அரசு

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. தலைநகர் சென்னையில் இரவு நேர ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. நகரின் முக்கிய சாலைகள், இணைப்பு சாலைகள், மேம்பாலங்கள் தடுப்புகள் கொண்டு மூடப்பட்டன.
சென்னையில் உற்பத்தியான 45 டன் ஆக்சிஜனை ஆந்திரா, தெலுங்கானாவுக்கு அனுப்பிய மத்திய அரசு
Published on

சென்னை,

இரவு நேர ஊரடங்கில் நகரை சுற்றிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை நகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

22 வாகனங்கள் பறிமுதல்

அந்தவகையில் சாலையில் தேவையில்லாமல் சுற்றியதாக 22 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த வாகன உரிமையாளர்களை நேற்று போலீஸ் நிலையங்களுக்கு வரவழைத்து உரிய அறிவுரைகள் கூறி அவர்களது வாகனங்களை போலீசார் ஒப்படைத்தனர்.

2-வது நாளாக நேற்றும் இரவு நேர ஊரடங்கில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். சைரன் வைத்த வாகனங்களில் நகர் முழுவதும் சுற்றி சுற்றி வந்து சாலையில் தேவையில்லாமல் யாரும் வாகனங்களில் சுற்றாதவாறு பார்த்துக்கொண்டனர்.

போலீசார் தீவிர கண்காணிப்பு

சாலையில் சுற்றுவோரையும் போலீசார் விசாரித்து உரிய, அவசிய காரணங்கள் இருக்கும்பட்சத்தில் அனுமதித்தனர். மருந்தகங்களுக்கு செல்கிறேன் என்று கூறி செல்வோரிடம், மருந்துச்சீட்டு கேட்டு விசாரித்த பின்பே அனுப்பி வைத்தனர்.

அந்தவகையில் சென்னை மாநகர் முழுவதும் ரோந்து வாகனம், தடுப்புகள் அமைத்தது என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் இரவு நேர ஊரடங்கில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com