மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

திசையன்விளை அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
Published on

திசையன்விளை:

திசையன்விளையை அடுத்த அப்புவிளை நடுத்தெருவை சேர்ந்தவர் பழனி நாடார். இவரது மனைவி சண்முகக்கனி (வயது 75). இவர் நேற்று மாலை அங்குள்ள பள்ளியில் படிக்கும் தனது பேத்தியை அழைத்து வர தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

அவர்கள் சென்ற வேகத்தில் அருகில் இருந்த வேகத்தடையை கடக்க முயன்றபோது தவறி கீழே விழுந்தனர். அவர்கள் விழுந்த இடத்தில் கத்தி, 25-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் சாவிகள், மதுபாட்டில் உள்ளிட்டவை கீழே விழுந்தது. சம்பவம் குறித்து சண்முகக்கனி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com