

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட் டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க., சசிகலா-டாக்டர் ராமதாஸ் அணி என 5 முனை போட்டி நிலவுகிறது.
தேர்தல் போட்டி களத்தில் குதித்துள்ள வேட்பாளர்கள் வீதிவீதியாக சென்று தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கினார். அவர், பொதுக்கூட்டங்கள் மூலமாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி அவர் நேற்று காலையில் விருதுநகரிலும், இரவில் மதுரையிலும் பிரசாரம் செய்தார். இவ்வாறு 2 கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை அவர் நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் அவர், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 65 வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி உள்ளார். அவர் தனது 3-வது கட்ட பிரசாரத்தை புதுச்சேரியில் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் தொடங்குகிறார்.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “தமிழகத்தில் திமுக இருக்கும் வரை மும்மொழி கொள்கையை மத்திய அரசால் கொண்டு வரமுடியாது. வெற்றி வாய்ப்பு சூப்பரா இருக்கு; 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.