பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் செய்யப்பட்ட மாற்றம் தொடரும்

சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் செய்யப்பட்ட மாற்றமும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் செய்யப்பட்ட மாற்றம் தொடரும்
Published on

சென்னை,

சென்னை எழும்பூரில் நடைமேடை எண்.10 மற்றும் 11 இல் உள்ள வழித்தடத்தில் நடைபெறும் பராமரிப்பு பணியை கருத்தில் கொண்டும், ரெயில் இயக்கத்தை எளிதாக்கும் வகையிலும், ரெயில் சேவைகளின் முறையில் மாற்றங்களை தெற்கு ரெயில்வே செய்துவருகிறது. அதன் அடிப்படையில், கடந்த முறை பொதிகை, நெல்லை, சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் தற்காலிகமாக சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்த நிலையில், பொதிகை, நெல்லை, சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் தொடரும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி,

புறப்படும் இடம் மாற்றம்;-

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12661) வருகிற மார்ச் 17 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும்.

நிறுத்தும் இடம் மாற்றம்:-

திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12632) வருகிற மார்ச் 16 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை காலை 6.25 மணிக்கு தாம்பரத்தில் நிறுத்தப்படும்.

புறப்படும் நேரம் மாற்றம்:-

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு காலை 8 மணிக்கு புறப்பட இருந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22675) வருகிற மார்ச் 16 முதல் ஏப்ரல் 5 வரை சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.15 மணிக்கு (2 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதம்) புறப்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com