சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்லும்

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தூத்துக்குடி
சென்னை எழும்பூர்-திருநெல்வேலி வந்தே பாரத் ரெயில் தினமும் சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.05 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.50 மணிக்கு நெல்லை சந்திப்பை அடைகிறது. மறுபுறம் நெல்லையிலிருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், அன்று இரவு 10.40 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும். தற்போது இந்த ரெயில் 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் சோதனை அடிப்படையில் சென்னை எழும்பூர்-நெல்லை வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று மத்திய ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story






