

சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள்
16 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். தொகுப்பூதிய அடிப்படையில் தாற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள் என்ற முறையில் பாதுகாப்பற்ற பணிச் சூழலில், கடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் என்பதை அரசின் கவனத்திற்கு தெரிவித்து, பணியாளர்கள் கோரிக்கைகள் மீது முதல்-அமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என காங்கிரஸ் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு), இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு - லெனினிஸ்டு) விடுதலை ஆகிய கட்சிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.