தமிழ்நாட்டிற்கு பிரதமர் வந்தவுடனே முதல்-அமைச்சருக்கு பதற்றம்: தமிழிசை சவுந்தரராஜன்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் "தப்பான இன்ஜினை" வைத்துக்கொண்டு ஓட்டிக் கொண்டிருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே நீங்கள் ஒரு ட்ரபிள் என்ஜின் (trouble engine) கவர்ன்மென்ட் வைத்துக்கொண்டு எல்லா மாநிலங்களிலும் வெற்றிகரமாக டபுள் இன்ஜின்(double engine) கவர்ன்மென்ட் நடத்திக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியை விமர்சிக்கிறீர்கள்.
குஜராத், மராட்டியம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மாநில அளவில் வெற்றியை தருவது மட்டுமல்லாமல் மாநகராட்சி அளவில் வெற்றியை தந்து அது ட்ரிபிள் இஞ்சின் trible engine)கவர்மெண்டாக போய்க்கொண்டிருக்கிறது ஆனால் பஞ்சாயத்து தேர்தலை கூட நடத்த பயந்து,
தமிழ்நாட்டில் ட்ரபிள் இன்ஜின் கவர்ன்மென்ட் ஆக போதை, கடன், பாதுகாப்பின்மை போன்றவற்றை ஏற்படுத்தி ஒட்டிக்கொண்டு இருக்கும் உங்கள் கவர்ன்மென்ட் போல் அல்லாமல் .. தமிழ்நாட்டில் நல்ல டபுள் இன்ஜின் கவர்மெண்ட் கொண்டுவர வேண்டுமென்றால் அதை "டப்பா இஞ்சின்" என்று விமர்சிக்கிறீர்கள் நீங்கள் தான் "தப்பான இன்ஜினை" வைத்துக்கொண்டு ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள் முதல்-அமைச்சரே...... தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வந்தவுடனேயே நீங்கள் அடையும் பதற்றம் உங்களது டிவீட்டில் நன்றாகவே தெரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






