

சென்னை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது;-
தமிழக முதல்-அமைச்சர் புதிதாக தற்போது கருப்புக்கொடி போராட்டம் அறிவித்துள்ளார். தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. ஒரு முறை ஏமாற்றலாம் தொடர்ந்து ஏமாற்ற முடியாது. கலைஞர் அரசியலமைப்புச் சட்டத்தை எரித்ததாக கூறினார். கடைசியில் பேப்பரை எரித்தேன் என விளக்கம் கொடுத்தார் சுதந்திரதினத்தை கருப்பு கொடி ஏற்றி துக்க நாளாக அறிவித்ததும் நீங்கள்தான்.
அறிவாலயத்தில் எத்தனை முறை நீங்கள் தேசியக்கொடியை ஏற்றி உள்ளீர்கள் நீங்கள் ஏற்கனவே மதுவுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டினீர்களே அதன் நிலை என்ன தமிழக மக்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டிய நீங்கள் வாழ்வை கருப்பாக்கி விட்டீர்கள் உங்களுக்குத்தான் அனைவரும் கருப்புக் கொடி காட்ட வேண்டும்.
ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு நிலை ஆட்சிக்கு வந்த பின்பு ஒரு நிலை என்பதுதான் உங்களது நிலைப்பாடு. தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர். தேர்தல் தோல்வி பயத்தால் இது போன்று கருப்புக்கொடி என்ற போராட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்ற முயற்சி செய்கிறீர்கள். மக்கள் தெளிவாக உள்ளனர். பொதுமக்கள் தங்கள் உணர்வுகளை ஏப்ரல் 23-ஆம் தேதி வெளிப்படுத்துவார்கள் அப்போது உங்கள் நாடகம் அம்பலமாகும் என கூறியுள்ளார்.