கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி மனு கொடுத்த சிறுவர்கள் - கலெக்டர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு

கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி ஜமா பந்தி கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதியிடம் சிறுவர்கள் மனு கொடுத்தனர்.
கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி மனு கொடுத்த சிறுவர்கள் - கலெக்டர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு
Published on

சென்னை மாவட்டம் அம்பத்தூர் வட்டம் வருவாய் தீர்வாயம் பசலி 1432-ன்படி அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஜமா பந்தி கூட்டம் நடைபெற்றது. இதில் அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் துறை, பொதுப்பணித்துறை, மின்வாரியம், கழிவுநீர் மற்றும் குடிநீர் வாரியம், காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் கொரட்டூரை சேர்ந்த சிறுவர்கள் சிலர் கையில் பதாகைகளுடன் அங்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவர்கள் கொரட்டூர் ஏரியில் கலக்கப்படும் கழிவுநீர் தடுக்கப்பட வேண்டும் என கூறி மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அமிர்த ஜோதி விரைவில் நடவடிக்கை எடுக்கபடும் என கூறினார். மொத்தத்தில் அங்கு 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் உடனடி தீர்வு காணும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com