

திருச்சி,
திருச்சி - சேலம் சாலையில் வாத்தலை என்ற இடத்தில் கொள்ளிடம் அணை உள்ளது. இதில் முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து 40,000 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அணையின் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதை அடுத்து திருச்சி ஆட்சியர் ராசாமணி அங்கு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர், மதகுகள் உடைந்திருந்தாலும் நீர் திறப்பு குறைவு என்பதால் கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும், நாளை மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, மறு சீரமைப்பு பணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.