முதுமலை யானைகள் முகாமில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட கலெக்டர்

இந்த நிகழ்ச்சியில் அலுவலர்கள் குடும்பத்தினர், ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட தெப்பக்காடு பகுதியில் யானைகள் முகாம் உள்ளது. இந்த முகாம் புகழ்மிக்க சுற்றுலா தலமாக திகழ்கிறது.
இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா கலந்து கொண்டார்.
மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, புலிகள் காப்பக கள இயக்குநர் கிருபா சங்கர், துணை இயக்குநர்கள் கணேசன், வித்யாதர் வன கோட்ட அலுவலர் கவுதம் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டு பொங்கல் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் அலுவலர்கள் குடும்பத்தினர், ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






