

செங்குன்றம்,
சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணையில் உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் செண்பகதேவி (வயது 18). கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வடக்குபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இவர், கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் மாணவி செண்பகதேவி கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் இருந்தார். அவருடன் படிக்கும் சக மாணவிகள் மதியம் விடுதிக்கு வந்தபோது, விடுதி அறையில் செண்பக தேவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாதவரம் பால்பண்ணை போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.