அதிமுக-திமுக இடையேதான் போட்டி; மற்றவர்களுக்கு இடம் இல்லை: ராஜேந்திர பாலாஜி


அதிமுக-திமுக இடையேதான் போட்டி; மற்றவர்களுக்கு இடம் இல்லை: ராஜேந்திர பாலாஜி
x

அதிமுகவுக்கு எதிராக சிலர் வெளியிடும் கருத்து கணிப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர்,

விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் வாரிய தலைவர் ஜான் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி வேண்டுராயபுரம் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பிலிப்வாசு வரவேற்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

எடப்பாடி பழனிசாமி பலமான கூட்டணி அமைப்பார். அ.தி.மு.க. கூட்டணி 180 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறும். பொங்கல் பண்டிகைக்கு பின்னர் இன்னும் சில கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

234 தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்த முடியாதவர்கள்கூட நான் தான் அடுத்த முதல்-அமைச்சர் என்கிறார். என் ஆதரவு இல்லாமல் யாரும் முதல்-அமைச்சராக முடியாது என்கிறார். இங்கு அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையேதான் போட்டி. மற்றவர்களுக்கு களத்தில் இடம் இல்லை.

சினிமா ஸ்டார்கள் யார் வந்தாலும் கூட்டம் கூடும்.. அதுவெல்லாம் ஓட்டாக மாறாது.. விஜய்யின் ஆசை நிராசைதான். நிச்சயம் களம் தவெகவுக்கு பல பாடங்களை கற்றுக் கொடுக்கும். கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடக்கிறது. அ.தி.மு.க.வுக்கு எதிராக சிலர் வெளியிடும் கருத்து கணிப்புகளை யாரும் நம்ப வேண்டாம். இது பொதுமக்களை குழப்புவதற்காக செய்யப்பட்ட சதி. இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story