வடிகால் வாய்க்கால் பாலத்தின் கான்கிரீட் தளம் இடிந்து விழுந்தது

வடிகால் வாய்க்கால் பாலத்தின் கான்கிரீட் தளம் இடிந்து விழுந்தது
வடிகால் வாய்க்கால் பாலத்தின் கான்கிரீட் தளம் இடிந்து விழுந்தது
Published on

வடக்குமாங்குடியில் வடிகால் வாய்க்கால் பாலத்தின் கான்கிரீட் தளம் இடிந்து விழுந்தது. புதிதாக பாலம் கட்டித்தர வண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தரைமட்ட பாலம்

அம்மாப்பேட்டை ஒன்றியம் வடக்குமாங்குடி வஞ்சுவழி பள்ளிவாசல் சாலையில் வடிகால் வாய்க்கால் மீது பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ. 7.60 லட்சம் மதிப்பில் தரைமட்ட பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து பழைய பாலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு அங்கு புதிய பாலம் கட்டுமான பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

கான்கிரீட் தளம் இடிந்து விழுந்தது

நேற்றுமுன்தினம் பாலத்தின் கான்கிரீட் தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதனை அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து பார்வையிட்டனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இடிந்து விழுந்த பாலத்தின் கான்கிரீட் தளத்தை சீரமைக்க வேண்டும். இல்லையெனில் பாலத்தை இடித்து விட்டு அகலப்படுத்தி புதிதாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com