காங்கிரஸ் கட்சியால் தனியாக நின்று டெபாசிட் கூட பெற முடியாது - சீமான் விமர்சனம்

நான் செய்ய வந்தது மக்கள் அரசியல் என சீமான் கூறினார்.
காங்கிரஸ் கட்சியால் தனியாக நின்று டெபாசிட் கூட பெற முடியாது - சீமான் விமர்சனம்
Published on

சென்னை,

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேனிசை செல்லப்பாவின் புகழ்வணக்க நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசியதாவது:-

”திமுக விடம் ஒரு எம்பி சீட்டு பெறுவது, தவெகவிடம் ஒரு எம்பி சீட்டை பெறுவது. அதற்கு எதற்கு ஒரு கட்சியை வைத்துள்ளீர்கள். மாணிக்கம் தாகூர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக கூட்டணியில் நின்று வெற்றிபெற முடியுமா? தனியாக நின்று டெபாசிட் கூட பெற முடியாது.

நான் தோற்றாலும் நான்கு விழுக்காடு வைத்துள்ளேன். நீங்கள் வென்றாலும் கூட அது வராது. நமது கட்சி ஊடகத் தீண்டாமையுடன் அணுகப்படுகிறது. ஊடகங்கள் பார்வையில் நாம் தீண்டத்தகாதவர்கள். நான் செய்ய வந்தது தேர்தல் அரசியலோ கட்சி அரசியலோ அல்ல, மக்கள் அரசியல். நான் செய்ய வந்தது செய்தி அரசியலோ, விளம்பர அரசியலோ அல்ல, சேவை அரசியல் மற்றும் செயல் அரசியல்."

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com