ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் கட்சி பேசுவதற்கு உரிமை உள்ளது: வேல்முருகன்

தி.மு.க. தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது என்று வேல்முருகன் கூறினார்.
கரூர்,
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆட்சியில் பங்கு என தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பேசுவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. காங்கிரஸ் கட்சியில் ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இவை அரசியல் கட்சிகள் தங்களுக்கு தேவையான இடங்களை பிடிப்பதற்கான யுக்திகளாகும்.
தற்போதைக்கு தி.மு.க. தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. 4 அணிகளாக இந்த தேர்தலை தமிழகம் சந்திக்க உள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் தி.மு.க. அரசு நிறைவேற்றி தர வேண்டும். தமிழகத்தில் சில அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகள் உதவியுடன் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






