காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
Published on

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரத்தநாடு

மணிப்பூர் கலவரத்தின் போது ஏற்பட்ட பெண் பாலியல் வன்கொடுமையை தடுக்காத மணிப்பூர் மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை தாங்கி, மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், ஒரத்தநாடு வட்டார தலைவர்கள் அய்யப்பன், சுரேஷ், திருவோணம் வட்டாரத் தலைவர் முத்து, மாவட்ட சேவா தள துணைத்தலைவர் ஜெயசூர்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பேராவூரணி

மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்தும், வழக்குகள் போட்டு ராகுல் காந்தியை முடக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்தும், நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரத்தை பற்றி பேச மறுக்கும் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்தும் பேராவூரணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம் தலைமை தாங்கினார். சிறுபான்மைத்துறை மாவட்ட தலைவர் நாகூர் கனி, வட்டார தலைவர்கள் இளங்கோ, சேக் இப்ராம்ஷா, நகர தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணன், சிறுபான்மைத்துறை வட்டார தலைவர் அஜிஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் அண்ணாமலை, பேரூராட்சி கவுன்சிலர் பழனியம்மாள் நீலமேகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கும்பகோணம்

மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கும்பகோணத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பபாட்டத்துக்கு தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். மாநகர மேயர் சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தில் நாதன், வட்டார தலைவர் பால தண்டாயுதம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாநகர தலைவர் மிர்ஷாவுதீன் வரவேற்றார். முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன் நன்றி கூறினார்.

பாபநாசம்

பாபநாசத்தில் சட்டசபை தொகுதி காங்கிரஸ் சார்பில் தெற்கு வட்டார தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வடக்கு வட்டார தலைவர் நாகேந்திரன், வட்டார செயலாளர் ஜெகபீம அரசு, அய்யம்பேட்டை நகரத் தலைவர் பஷீர் முகமது, நகரத் துணைத் தலைவர் சங்கீதா ஸ்ரீதர், மாவட்ட பொறுப்பாளர் ஹாஜா மொய்தீன், அம்மாப்பேட்டை வட்டாரத் தலைவர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சியினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பாபநாசம் அண்ணா சிலையில் இருந்து காய்கறி மார்க்கெட் வரை ஊர்வலமாக சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com