அரசு பள்ளி வளாகத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் கட்டிடம் கட்டும் பணி தொடக்கம்

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக அரசு பள்ளி வளாகத்தில் தாண்டப்பட்ட பள்ளத்தில் கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது
Published on

மெலட்டூர்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக அரசு பள்ளி வளாகத்தில் தாண்டப்பட்ட பள்ளத்தில் கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.

பெரிய பள்ளம்

அம்மாப்பேட்டை ஒன்றியம் இடையிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்காக 15 அடி ஆழத்திற்கு பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டப்பட்டு பல மாதங்களுக்கு மேலாகியும் கட்டுமான பணியும் நடைபெறவில்லை. பள்ளமும் மூடப்படவில்லை.

இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி குட்டை போல் காணப்பட்டது. இதன் காரணமாக மாணவர் தவறி விழுந்து உயிரிழக்கும் அபாயம் இருந்து வந்தது.

கட்டிடம் கட்டும் பணி தொடக்கம்

இந்த பள்ளத்தை மூட வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி படத்துடன் வெளிவந்தது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி வளாகத்தில் பள்ளம் தோண்டிய பகுதியில் பில்லர் அமைத்து வகுப்பறை கட்டும் பணி தொடங்க நடவடிக்கை எடுத்தனர்.

மாணவர்கள் நலன் கருதி உயிரிழப்பு ஏற்படும் முன்பு கட்டிட பணியை தொடங்க நடவடிக்கை எடுத்த ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு, செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com