கட்டிட சிலாப் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

ஒடுகத்தூர் அருகே கட்டிட சிலாப் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கட்டிட சிலாப் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
Published on

அணைக்கட்டு

ஒடுகத்தூரை அடுத்த புளியங்குடிசை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் தேவன் (வயது 25). இவர் சொந்தமாக அதே பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார்.

வீடு கட்டும் பணியில் கொட்டாவூர் பகுதியை சேர்ந்த சல்லாபுரி (52) என்பவர் ஈடுபட்டிருந்தார்.

இன்று காலை சல்லாபுரி வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென புதிய கட்டிடத்தில் கட்டப்பட்டிருந்த சிலாப் இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் சல்லாபுரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சல்லாபுரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com