அதிமுக - திமுக இடையேதான் போட்டி - எடப்பாடி பழனிசாமி பேட்டி

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமென எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுக - திமுக இடையேதான் போட்டி - எடப்பாடி பழனிசாமி பேட்டி
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது;

"தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கு இடையேதான் போட்டி. அது எந்த கட்சி என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். தி.மு.க., அ.தி.மு.க. இடையேதான் போட்டி. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியால் தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன்ஆட்சி அமைக்கும்.

முதல்வர் முக ஸ்டாலின் 5-வது முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். இந்த வெளிநாட்டு பயணங்களின் மொத்த விளக்கமும் வேண்டும். அதிமுக ஆட்சியின் போது முதலீடுகள் ஈர்க்கப்பட்டு அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தன. ஒப்பந்தம் போட்டவுடனேயே தொழில் தொடங்கப்பட்டது போல் பொய் செய்தி பரப்புகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com