நகராட்சி அலுவலகம் முன்பு முதியவர் பிணம்

குழித்துறை நகராட்சி அலுவலகம் முன்பு முதியவர் பிணம் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி யார் அவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகராட்சி அலுவலகம் முன்பு முதியவர் பிணம்
Published on

குழித்துறை:

குழித்துறை நகராட்சி அலுவலகம் முன்பு முதியவர் பிணம் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி யார் அவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மார்த்தாண்டம் வெட்டுமணியில் குழித்துறை நகராட்சி அலுவலகம் முன் பகுதியில் மினி பூங்கா உள்ளது. அந்தப் பூங்காவின் முன்பு நேற்று காலையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. அவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. அவரிடம் ஒரு மருந்துச் சீட்டு மட்டும் இருந்தது. அதில் பொன்னையன் (வயது 75) என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது. அவரது ஊர் மற்றும் வேறு எந்த விவரமும் இல்லை. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com