தஞ்சை: கள்ளக்காதலன் கத்தியால் குத்திக்கொலை - கணவன், மனைவி கைது

கள்ளக்காதலன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை: கள்ளக்காதலன் கத்தியால் குத்திக்கொலை - கணவன், மனைவி கைது
Published on

தஞ்சை,

தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா கண்டியூரை சேர்ந்தவர் சத்தியசீலன் என்கிற அருண்(வயது 31). பட்டதாரி வாலிபரான இவர் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி நந்தினி(24). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது.

சத்தியசீலனின் நண்பர் அதே ஊரை சேர்ந்த பிரகாஷ்(29). இவரும் பட்டதாரி வாலிபர்கள். நெருங்கிய நண்பர்களான இருவரும் சவுண்ட் சர்வீஸ் வேலைக்கு சேர்ந்து செல்வது வழக்கம்.

கள்ளக்காதல்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு சத்தியசீலனின் மனைவி நந்தினிக்கும், பிரகாசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து வந்தனர்.

இதற்கிடையே கடந்த 2 மாதத்திற்கு முன்பு பிரகாசும், நந்தினியும் கண்டியூரில் இருந்து வெளியேறி சுவாமிமலை அருகே உள்ள அலவந்திபுரம் கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு குடும்பம் நடத்தி வந்தனர். ஆரம்பத்தில் கள்ளக்காதலர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் அங்கு வந்த ஒரு மாதத்திலேயே இருவருக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டது.

மன்னிப்பு கேட்டார்

இந்த நிலையில் நந்தினி தனது கணவர் சத்தியசீலனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நான் உங்களுக்கு துரோகம் செய்து விட்டு உங்கள் நண்பருடன் வந்து விட்டேன். இங்கு வந்த பின்னர்தான் நான் செய்த தவறு எனக்கு தெரிய வந்தது. எனவே என்னை மன்னித்து விடுங்கள் நான் மீண்டும் உங்களிடம் வந்து விடுகிறேன். என்னை அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து சத்தியசீலன் தீபாவளி முதல் நாள் அன்று நள்ளிரவு சத்தியசீலன் தனது மனைவியை தேடி அவர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று உள்ளார்.

கத்தியால் குத்திக்கொலை

அங்கு சென்ற சத்தியசீலன், வீட்டின் கதவை தட்டி உள்ளார். கதவு தட்டும் சத்தம் கேட்டு பிரகாஷ் கதவை திறந்து உள்ளார். அப்போது சத்தியசீலன், கத்தியால் பிரகாஷை குத்தி உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் வீட்டில் இருந்த நந்தினி பிரகாசின் கைகளை பின்புறமாக பிடித்துக்கொண்டார். உடனே பிரகாஷின் உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சத்தியசீலன் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே பிரகாஷ் துடி, துடித்து இறந்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியசீலன் அவரது மனைவி நந்தினி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com