சர்வதேச அளவிலான பயங்கரவாத சவால்களை நாடு எதிர்கொண்டுள்ளது; ராஜ்நாத் சிங்

சர்வதேச அளவிலான பயங்கரவாத சவால்களை நாடு எதிர்கொண்டுள்ளது என பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
சர்வதேச அளவிலான பயங்கரவாத சவால்களை நாடு எதிர்கொண்டுள்ளது; ராஜ்நாத் சிங்
Published on

சென்னை,

சென்னை மீனம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கடலோர காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய 61 அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதக்கங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், சர்வதேச அளவிலான பயங்கரவாத செயல்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற முக்கிய சவால்களை நமது நாடு எதிர்கொண்டு வருகிறது.

கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் கடல் வழியேயான தீவிரவாத தாக்குதல் நடந்தது. நமது நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதே நமது அரசின் வலிமையான தீர்மானம் ஆகும் என்று பேசினார்.

நாம் பாதுகாப்புடன் இருக்கிறோம் மற்றும் தேச கட்டமைப்பில் சிறந்த பங்காற்றுகிறோம் என நாட்டு மக்கள் உணரும் வகையில் அதனை உறுதி செய்வதற்கான சீரிய பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது என்று சிங் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com