சாலையில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டது

விழுப்புரம் பாண்டியன் நகரில் சாலையில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டது கலெக்டர் நடவடிக்கை
சாலையில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டது
Published on

விழுப்புரம்

விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் பாண்டியன் நகர் அருகே விழுப்புரம் நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை அமைக்க சுமார் 1.50 மீட்டர் ஆழத்திற்கு எந்திரங்களை கொண்டு மண்வேலை செய்து குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது அங்குள்ள சாலையோரத்தில் பள்ளத்திற்கு அருகில் கனரக வாகனங்களின் போக்குவரத்து செறிவு மிக அதிகளவில் இருந்ததால் அச்சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசலை உடனடியாக சரிசெய்யும்படி நெடுஞ்சாலைத்துறையினருக்கு மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்களால், விரிசல் ஏற்பட்ட பகுதியில் தார் கலவை கொண்டு சீரமைக்கப்பட்டது. இதனால் பொது போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித பாதிப்பும், அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com