குற்றவாளியை 2 காவலர்கள் பாதுகாப்புடன் சிறையில் அடைக்க வேண்டும் - சென்னை காவல்துறை உத்தரவு

ஒவ்வொரு குற்றவாளியையும் 2 காவலர்கள் பாதுகாப்புடன் சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றவாளியை 2 காவலர்கள் பாதுகாப்புடன் சிறையில் அடைக்க வேண்டும் - சென்னை காவல்துறை உத்தரவு
Published on: 

சென்னை,

குற்றவாளியை 2 காவலர்கள் பாதுகாப்புடன் சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சிறையில் இருந்து கைதிகள் தப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து சென்னை காவல்துறை இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

சென்னை காவல்துறை

அனைத்து உதவி ஆணையர்களும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கைது செய்யப்படும் ஒவ்வொரு குற்றவாளியையும் இரண்டு காவலர்கள் பாதுகாப்புடன் சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

நிச்சயமாக பின்பற்ற அறிவுறுத்தல்

இந்த உத்தரவை காவல் ஆய்வாளர்கள் நிச்சயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறையில் இருந்து கைதிகள் தப்பிய விவகாரத்தை தொடர்ந்து காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X