

நெமிலி அடுத்த திருமால்பூர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையின்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற காஞ்சீபுரம் பெருநகர் பகுதியை சேர்ந்த மகாதேவன் (66), அவருடைய மகன் குமார் (33) ஆகியோர் மீது ஆலமரக்கிளை முறிந்து விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.
இந்த நிலையில் அங்கிருந்து மகாதேவன் மேல்சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.