6 ஆண்டுகளாக பொதுமக்களை அச்சுறுத்திய முதலை... இன்று சிக்கியது!

முதலை உலா வருவதால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர்.
முதலை சிக்கியது
Published on

கன்னியாகுமரி,

கடந்த 6 ஆண்டுகளாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலையை வனத்துறையினர் இன்று பிடித்தனர்.

முதலை சிக்கியது

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலமூடு அருகே கோதையாற்றில் கடந்த 6 ஆண்டுகளாக முதலை நடமாட்டம் இருந்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வந்தனர். இதையடுத்து முதலையை பிடிப்பதற்காக வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். ஆற்றுப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இன்று ஒருநடைக்கல் ஆற்றுப்பாலம் அருகே வனத்துறையினர் விரித்திருந்த வலையில் முதலை சிக்கியது. இதையடுத்து வனத்துறையினர் முதலையை பாதுகாப்பாக மீட்டனர். கடந்த 6 ஆண்டுகளாக அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com