பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை வாங்கி தரப்படும் - கனிமொழி எம்.பி பேட்டி

தொகுதி பங்கீட்டில் பெரும்பாலும் எல்லா கூட்டணிகளும் உறுதிசெய்யப்பட்டு, முடிவு செய்யப்பட்டு விட்டன என கனிமொழி கூறியுள்ளார்.
பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை வாங்கி தரப்படும் - கனிமொழி எம்.பி பேட்டி
Published on

தூத்துக்குடி,

பாஜக தலைமையில்தான் அதிமுக கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமானநிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

போரின் காரணமாக, மக்கள் இன்று ஒரு பெரிய சூழலில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள், பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டுக்கான ஒரு சரியான திட்டத்தை மத்திய அரசு வைத்திருப்பதாகத் தெரியவில்லை. இதனைச் சரிசெய்வதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் எல்லா கூட்டணிகளும் உறுதிசெய்யப்பட்டு, முடிவு செய்யப்பட்டு விட்டன. இன்னும் ஓரிரு கூட்டணிகளிடம் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், அவையும் விரைவில் முடிவுக்கு வந்துவிடும்.

அதிமுக இப்போது பாஜகவின் பி டீம் என்பதுபோல மாறிவிட்டனர். அதிமுக கூட்டணி என்று பெயரிடப்பட்டிருந்தாலும், பாஜக தலைமையில்தான் கூட்டணி இயங்கிக் கொண்டிருக்கின்றனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com