தினத்தந்தி புகார் பட்டி

தினத்தந்தி புகார் பட்டி
தினத்தந்தி புகார் பட்டி
Published on

சேதமடைந்த சிலாப்

நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு போக்குவரத்து பணிமனையின் அருகே ஆவின் பால் விற்பனை நிலையம் உள்ளது. இதன் பக்கத்தில் உள்ள கழிவுநீர் ஓடையின் மீது அமைக்கப்பட்டிருந்த சிமெண்டு சிலாப்பு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பகுதியில் புதிய சிமெண்டு சிலாப்பை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகமணி, வடிவீஸ்வரம்.

நிழற்குடை சீரமைக்கப்படுமா?

தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நங்கூரான் பிலாவிளையில் உள்ள நிழற்குடையானது பழுதடைந்து உள்ளது. நிழற்குடையின் காங்கிரீட் தளத்தின் அடிப்பகுதி சிறிது சிறிதாக உடைந்து வருகிறது. மழை நேரத்தில் நீர்க்கசிவு ஏற்படுகிறது. இதனால் பயணிகள் ஒரு வித பயத்துடனேயே நிழற்குடைக்குள் நிற்கும் நிலை உள்ளது. எனவே இந்த நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.ராம்தாஸ், சந்தையடி.

வீணாகும் குடிநீர்

மணவாளக்குறிச்சி பகுதியில் குடிநீரானது பல நேரங்களில் முன்னறிவிப்பு இன்றி நிறுத்தப்படுகிறது. ஆனால் சில பகுதிகளில் எப்போதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், யானை வரவழைத்த பிள்ளையார் கோவில் அருகில் உள்ள குழாயில் நல்லி பழுதடைந்து குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது. எனவே, இந்த பகுதிகளில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யவும், பழுதடைந்த குழாய் நல்லியை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ்கோபால், மணவாளக்குறிச்சி.

நடைபாதை அவசியம்

நாகர்கோவில் கோட்டாரில் இருந்து செட்டிகுளத்துக்கு செல்லும் சாலை எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், பாதசாரிகள் சாலையோரத்தில் நடந்து செல்வதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பாதசாரிகள் வசதிக்காக சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் ஓடையின் மீது சிலாப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, கோட்டார்.

வாகன ஓட்டிகள் அவதி

கன்னியாகுமரி அருகே மாதவபுரத்தில் இருந்து சின்னமுட்டம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் கோரிக்க விடுத்து உள்ளனர்.

-சபரி, மாதவபுரம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com