சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

கொள்ளிடம் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்
Published on

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் இருந்து மாதானம் செல்லும் பிரதான சாலை உள்ளது. ஆலாலசுந்தரம் கிராமத்தில் இருந்து பண்ணங்குடி, கற்பள்ளம், சீயாளம், கூத்தியம்பேட்டை மற்றும் புத்தூர் வழியாக சீர்காழி செல்லும் முக்கிய சாலையாக இருந்து வரும் இந்த சாலை கடந்த 5 ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து கரடு, முரடாக காணப்படுகிறது. இதனால் கொள்ளிடம், சீர்காழி, சிதம்பரம், புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனங்கள், சைக்கிள் போன்றவற்றில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைக்கின்றனர். நடந்து செல்லும் பொதுமக்களின் கால்களில் கப்பி கற்கள் குத்துவதால் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த சாலையை சீரமைக்கக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலாலசுந்தரம் கிராமத்தில் இருந்து கற்பள்ளம், பண்ணங்குடி செல்லும் சாலையை சீரமைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com