

சென்னை,
தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 100-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தவெகவின் ஆதவ் ஆர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி.விஜயின் பிரசாரத்தை முடக்கினார்கள், அவதூறு பரப்பினார்கள். வாக்குக்கு பணம் கொடுக்காமல் பெற்ற வெற்றி இது. சாதி அரசியல், மத அரசியலை தூக்கி எறிந்த தேர்தல். மன்னராட்சி தூக்கி எறியப்பட்ட நாள். புதிய ஆட்சி இளைஞர்கள், மக்களுக்கானதாக இருக்கும். இந்த வெற்றி தமிழக இளைஞர்கள், பெண்கள் அனைவருக்கும் சொந்தம்.
இவ்வாறு அவர் கூறினார்.