தோட்டத்தில் பிணமாக கிடந்த விவசாயி

திருவேங்கடம் அருகே தோட்டத்தில் விவசாயி பிணமாக கிடந்தார்.
தோட்டத்தில் பிணமாக கிடந்த விவசாயி
Published on

திருவேங்கடம்:

திருவேங்கடம் அருகே மைப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் மாரிசாமி (55). விவசாயி. இவருடைய மனைவி மகாலட்சுமி (45). கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் வீட்டை விட்டு சென்ற மாரிச்சாமி 10 நாட்களாக வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மாரிசாமியை பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்நிலையில் விவசாய பணிக்காக தனது தோட்டத்துக்கு சென்ற மகாலட்சுமி, அங்கு அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக திருவேங்கடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தது மாரிச்சாமி என்பது தெரியவந்தது. அவரது உடல் அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் கிடந்ததால் அவர் குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்து இறந்தாரா ?அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com