விருப்ப மனுக்கள் அளிக்கும் காலம் 27--ம் தேதி வரை நீட்டிப்பு: அன்புமணி அறிவிப்பு


விருப்ப மனுக்கள் அளிக்கும் காலம் 27--ம் தேதி வரை நீட்டிப்பு: அன்புமணி அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Dec 2025 12:27 PM IST (Updated: 19 Dec 2025 1:34 PM IST)
t-max-icont-min-icon

மனு தாக்கல் செய்ய மேலும் சில காலத்திற்கு நீடிக்க வேண்டும் என ஏராளமானோர் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், தாங்களும் மனு தாக்கல் செய்ய வசதியாக காலக்கெடுவை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வேண்டும் என ஏராளமானோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதை ஏற்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை வழங்குவதற்கான காலக்கெடு டிசம்பர் 27-ஆம் நாள் சனிக்கிழமை வரை நீட்டிக்கப்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story