நாய்கள் கடித்ததில் மான் சாவு

நாய்கள் கடித்ததில் மான் பரிதாபமாக இறந்தது.
நாய்கள் கடித்ததில் மான் சாவு
Published on

திருச்சுழி,

திருச்சுழி அருகே கேத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மானை தெரு நாய்கள் கடித்ததில் மான் படுகாயம் அடைந்தது. இந்தநிலையில் கிராம மக்கள் அந்த மானை பத்திரமாக மீட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆண் புள்ளி மானை மீட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் மான் உயிரிழந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com