அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது - முதலமைச்சர் பழனிசாமி

அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது - முதலமைச்சர் பழனிசாமி
Published on

சென்னை,

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது படத்தின் முன் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அவருடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேதனையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. பாபநாசம் தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றிபெற்றவர் துரைக்கண்ணு. எனது ஆட்சியிலும் வேளாண்துறை அமைச்சராக திறம்பட பணியாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றவர் துரைக்கண்ணு. அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும், அதிமுகவினருக்கும், தமிழக மக்களுக்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com