இடிக்கப்பட்ட சுகாதார கழிவறை வளாகத்தை உடனே கட்ட வேண்டும்

கருவேப்பிலங்குறிச்சியில் இடிக்கப்பட்ட சுகாதார கழிவறை வளாகத்தை உடனே கட்ட வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை
இடிக்கப்பட்ட சுகாதார கழிவறை வளாகத்தை உடனே கட்ட வேண்டும்
Published on

விருத்தாசலம்

விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். விருத்தாசலம், திட்டக்குடி, ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட நகரங்களின் சந்திப்பு சாலையாக கருவேப்பிலங்குறிச்சி கூட்டுரோடு உள்ளது. இதனால் கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பொது சுகாதார கழிவறை இடிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய கழிவறை கட்டுவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வட்டார தலைவர் ராவண ராஜன் தலைமையில் நகர செயலாளர் விஜயபாண்டியன், ராமச்சந்திரன் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நேற்று விருத்தாசலம் சப்-கலெக்டர் லூர்துசாமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி கருவேப்பிலங்குறிச்சி கூட்டுரோட்டில் இடிக்கப்பட்ட கழிவறையை உடனடியாக கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் அருகில் உள்ள குளத்தை அளந்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட சப்- கலெக்டர் லூர்துசாமி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com