திமுகவை ஒருபோதும் அழிக்க முடியாது - வைகோ

அமைச்சர் கே.என்.நேருவை ஆதரித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் பிரசாரம் மேற்கொண்டார்.
திமுகவை ஒருபோதும் அழிக்க முடியாது - வைகோ
Published on

திருச்சி,

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளரான அமைச்சர் கே.என்.நேருவை ஆதரித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க.வின் அரணாக இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சரும், அனைத்து தரப்பு மக்களின் பேரண்பை பெற்ற வருமான கே.என். நேரு, சிங்கப்பூருக்கு நிகராக இந்த ஆசிய கண்டத்தில் எங்கும் இல்லாத அழகிய பஸ் நிலையம் போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். எந்த மாநிலங்களிலும் இல்லாத திட்டங்களை தமிழ்நாட்டில் நிறை வேற்றி வரும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும்.

தமிழ்நாட்டில் இருந்து தி.மு.க.வை வேரோடு அழித்து விடுவோம் என அமித்ஷா, அண்ணாமலை ஆகியோர் பேசி உள்ளனர். ஆனால் தி.மு.க.வை வேரோடு ஒருபோதும் அழிக்க முடியாது. மேலும் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு உயிரிழப்பு, சாத்தான்குளம் தந்தை, மகன் சம்பவம் போன்றவற்றுக்கு அப்போதைய ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.

தமிழ்நாடு தற்போது அமைதி பூங்காவாக திகழ்கிறது. இந்த நல்லாட்சி தொடர தி.மு.க.வுக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சியில் அமர செய்ய வேண்டும். எனவே இந்த தொகுதியின் வேட்பாளர் கே.என்.நேருவுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com