

சென்னை,
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், திருவெறும்பூர் தொகுதியில் பட்டா கொடுத்த இடத்தை காணவில்லை. கொடுத்தவை அனைத்தும் போலி பட்டா; இது மாவட்ட கலெக்டருக்கும் தெரியும்; தேர்தலை மனதில் வைத்து ஓட்டுக்காக போலி பட்டா கொடுக்கப்பட்டுள்ளது; இதனை ஆய்வு செய்ய வேண்டும் என நவல்பட்டு விஜி தவெக கூறினார்.
இதற்கு பதில் அளித்த திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,
கடந்த திமுக ஆட்சியில் 73 லட்சம் பேருக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளது.வரலாற்றிலேயே இதுவே அதிகம்; தகுதியான நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதுகுறித்த புகார்கள் என்னிடமும் வந்துள்ளது. பொது மக்கள் கொடுத்த புகார் மனுக்களை நிச்சயம் அவையில் சமர்பிப்பேன் என கால்நடைத்துறை அமைச்சர் கமலி கூறினார்.