திமுக மடைமாற்ற அரசியலைக் கையில் எடுத்துள்ளது - ஆதவ் அர்ஜுனா

மக்கள் வைத்திருக்கும் அன்புக்கும், ஆதரவுக்கும் என்றும் உண்மையாக இருப்பேன் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
திமுக மடைமாற்ற அரசியலைக் கையில் எடுத்துள்ளது - ஆதவ் அர்ஜுனா
Published on

சென்னை,

தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி 98-வது வார்டில் உள்ள சாமிதாஸ்புரம், அஸ்பிரான் கார்டன், ராஜு தெரு, காமராஜ் நகர், அயனாவரம் வாட்டர் டேங்க் ரோடு மற்றும் சோலையம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் இன்று காலை தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டோம்.

மக்கள் செல்வாக்கை இழந்த திமுக, தேர்தலுக்குக் கடைசி நாட்களில் அவதூறு, போலி பிரசாரம், பொய் வாக்குறுதிகள் போன்ற மடைமாற்ற அரசியலைக் கையில் எடுத்துள்ளது. ஐந்தாண்டு ஆட்சி முழுக்க அராஜகம் மட்டும் செய்துவிட்டு, மக்களுக்கு ஏதும் செய்யாத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவெடுத்துவிட்டனர்.

மக்களின் ஒரே நம்பிக்கையாகவும், மாற்றத்திற்கான மக்களாட்சி நாயகராகவும் நம் வெற்றித் தலைவர் அவர்கள் களத்தில் நிற்கிறார். வில்லிவாக்கம் தொகுதியின் வெற்றி வேட்பாளரான என் மீது மக்கள் வைத்திருக்கும் அன்புக்கும், ஆதரவுக்கும் என்றும் உண்மையாக இருப்பேன். நிச்சயம் வெல்வோம்!

விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம்!

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கான நலனை வென்றெடுப்போம்!!

நம்மால் முடியும்!!!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com