பொய்யான வாக்குறுதியை கூறி திமுக ஆட்சியை பிடித்தது - மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி

பொய்யான வாக்குறுதியை கூறி திமுக ஆட்சியை பிடித்தது என மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.
பொய்யான வாக்குறுதியை கூறி திமுக ஆட்சியை பிடித்தது - மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி
Published on

சேலம், 

சேலத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய மத்திய மந்திரி எல். முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய பாஜக அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அந்த வகையில் 8 ஆண்டில் எண்ணற்ற சாதனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வீடு தோறும் கழிவறை வசதி, சுகாதாரமான குடிநீர் திட்டம், அனைவருக்கும் வங்கி கணக்கு, விவசாயிகளுக்கு 6 ஆயிரம் நிதி உதவி, உணவு பாதுகாப்பு சட்டம், சிறு நகரங்களில் விமான நிலையம் ,கடல்பாசி ஆராய்ச்சி மையம் என ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக அரசு குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் வழங்குவதாகவும், மானிய விலையில் டீசல் வழங்குவதாகவும் ,மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி செய்வதாகவும் வாக்குறுதிகளை கூறி ஆட்சியை பிடித்தது.

ஆனால் அந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சேலத்தில் ராணுவ உதிரி பாகங்கள் தொழிற்சாலை, ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது.

தமிழக கவர்னர் விவகாரத்தில் விடுதலை சிறுத்தை கட்சிகள் உள்பட சில அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்வதில் குறிக்கோளாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com