திமுக ஆட்சி 23ம் புலிகேசி ஆட்சி - செல்லூர் ராஜு கிண்டல்


திமுக ஆட்சி 23ம் புலிகேசி ஆட்சி - செல்லூர் ராஜு கிண்டல்
x
தினத்தந்தி 1 Jan 2026 11:24 AM IST (Updated: 1 Jan 2026 12:09 PM IST)
t-max-icont-min-icon

டெக்னாலஜி கஞ்சா விற்பனையில் வளர்ச்சி அடைந்து இருப்பதாக செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை,

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் ஆட்சிக்கு வரும். எடப்பாடி பழனிசாமி உறுதியாக வெற்றி பெறுவார். அவர் தான் 2026ல் முதல்-அமைச்சர். மின்மினி பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது. மக்கள் தான் எஜமானர்கள். இது சினிமா வசனம் இல்லை. அமிதாப் பச்சன் வந்தாலும் கூட்டம் கூடும். யார் ஆட்சி அமைப்பார்கள் என மக்கள் தான் தீர்மானிப்பார்கள்.

மதுரையில் ரூ.200 கோடி மக்களின் வரிப்பணம் திமுக நிர்வாகியால் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு தீர்வே கிடைக்க வில்லை. ஒரு மேயர் இல்லாமல் மாநகராட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 3 மாதங்களாக மாநகராட்சி கூட்டங்கள் நடைபெறவில்லை. இதனால் மக்களின் குறை, நிறைகள் குறித்து பேச முடியவில்லை.

இது போல ஒரு அவல ஆட்சி இந்தியாவில் மட்டும் அல்ல வேறு எங்கும் நடந்தது இல்லை. 5 மண்டல தலைவர்கள் இல்லை. நிலைக்குழு தலைவர் இல்லை. எனவே திமுக ஆட்சி 23-ம் புலிகேசி ஆட்சியை போலத்தான் இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

போதைப்பொருட்களால் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத சூழ்நிலை இருக்கிறது. எனவே போதைப்பொருட்களை ஒழிக்கவேண்டும்.

மக்கள் நல்வாழவு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அருமையாக ஜோக் அடித்துள்ளார். முன்னாடி எல்லாம் போதைப்பொருளை விற்பார்கள். ஆனால் இப்போது எல்லாம் ஆன்லைன் மூலமே விற்க தொடங்கி விட்டார்கள். கஞ்சா விற்பனை செய்பவர்கள் கூட டோர் டெலிவரி செய்ய தொடங்கிவிட்டனர். டெக்னாலஜி கஞ்சாவிலும் வளர்ந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story