திராவிட மாடல் என்றாலே சிலருக்கு எரிகிறது; முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்


திராவிட மாடல் என்றாலே சிலருக்கு எரிகிறது; முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
x

ஒரு நாளுக்கு அரைமணி நேரமாவது புத்தகங்களை இளைஞர்கள் படிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய 3 நூல்களை வெளியிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

அரசியல் புரட்சியின் அடையாளமாக திமுக விளங்குகிறது. திராவிட மாடல் என்றாலே சிலருக்கு எரிகிறது. அவர்களுக்கு எரிய எரிய நாம் திராவிட மாடல் என்று சொல்லி கொண்டே இருப்போம்.

ஆதிக்கவாதிகளுக்கு திராவிடம் என்றாலே கசக்கிறது. அந்தக் காலத்தில் நீதிக் கட்சியை குழி தோண்டி புதைப்பேன் என ஒருவர் சொன்னார். ஆனால் இன்றைக்கு நிலை என்ன? 100 ஆண்டுகள் கழித்தும் நீதிக்கட்சியின் நீட்சியாக தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடு பயணத்தை தொடர்ந்து வருகிறோம்.ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துகிற கருத்தியலோடு திராவிட இயக்கம் இருப்பதால்தான், ஆதிக்கவாதிகளுக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் நம்மை பார்த்தால் கசக்கிறது, எரிகிறது.தமிழ்நாட்டில் அறிவுத் தீ அணையாமல் இருப்பதால்தான் இங்கு கலவரத் தீயை பற்ற வைக்க முடியவில்லை.

வாசிப்பும், வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. 30 விநாடி ரீல் வீடியோவை கூட முழுவதுமாக பார்க்க முடியாமல், இந்த அடிக்‌ஷனால் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இளைஞர்கள் தவிக்கின்றனர். Good things take time என்பதை இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தினமும் அரை மணி நேரமாவது புத்தகங்களை வாசியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story