விமானத்தில் பறக்க வேண்டும் என்ற கனவு நனவானது... அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகம்!

விமானம் புறப்படும் போது இருந்த அச்ச உணர்வு மேலே பறக்கும் போது மறைந்து மகிழ்ச்சி அளித்தது என்று மாணவர்கள் கூறினர்.
விமானத்தில் பறக்க வேண்டும் என்ற கனவு நனவானது... அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகம்!
Published on: 

திருச்சி,

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு அரசு பள்ளி மாணவ-மாணவிகள் வந்தனர். விமான பயண கனவு நிறைவேறியதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விமானத்தில் பயணிக்கும் கனவு

விமானத்தில் பயணம் செய்வது என்பது அனைவருக்கும் ஒரு அலாதி பிரியம் தான். வானத்தில் செல்லும் விமானங்களை அண்ணாந்து பார்த்து ரசித்து, பெரு மூச்சுவிடும் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழை, எளிய குடும்பத்தினர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இதுபோன்ற ஏழை, எளிய குழந்தைகளின் கனவை நிறைவேற்றும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் "வானமே எல்லை" என்ற திட்டத்தின் வாயிலாக 35 ஏழை, எளிய பள்ளி குழந்தைகள், சிறப்பு குழந்தைகள், திருநங்கை மற்றும் 15 மூத்த குடிமக்கள் ஆகியோரை நேற்று காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

திருச்சியில் வரவேற்பு

திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அவர்களுக்கு பூக்கள் மற்றும் இனிப்புகள் கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் பஸ் மூலம் கல்லணை, தஞ்சை பெரிய கோவிலை பார்வையிட்டனர். அதன் பின்னர் இரவில் ரெயில் மூலம் சென்னை சென்றனர்.

மாணவர்களுடன் விமானத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரைஹானா. தொண்டு நிறுவனர் அரவிந்த் ஜெயபால், வி.ஜி.பி. குழுமத் தின் தலைவர் வி.ஜி.பி.சந்தோசம் ஆகியோரும் பயணம் மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனவு நிறைவேறியது

இந்த விமான பயணம் குறித்து மாணவ-மாணவிகள் கூறும்போது, விமானத்தில் பறக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறி உள்ளது. வானத்தில் பறக்கும் போது மேகங்களையும், மேலிருந்து புவியின் அழகையும் ரசித்தோம். விமானம் புறப்படும் போது இருந்த அச்ச உணர்வு மேலே பறக்கும் போது மறைந்து மகிழ்ச்சி அளித்தது என்றனர்.

X