விபத்தில் டிரைவர் பலி

விபத்தில் டிரைவர் பலியானார்.
விபத்தில் டிரைவர் பலி
Published on

 திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்பியக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார்(48), டிரைவரான இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருமழபாடி கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது அடைக்கலபுரம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை ஓரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வெங்கனூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com