மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலி

கோத்தகிரி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலி
Published on

நாகப்பட்டினம் பெரிய கன்ன மங்கலத்தை சேர்ந்த ராதா கிருஷ்ணன் என்பவரது மகன் கார்த்திக் (வயது 40), பொக்லைன் டிரைவர். இவர் கோத்தகிரி அருகே மசக்கல் கிராம பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து கார்த்திக் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com