மதுரையில் இருந்து சென்னை வந்தபோது சாப்பிட்டு கொண்டே ஆம்னி பஸ்சை ஓட்டிய டிரைவர்

சாப்பிட்டுக்கொண்டே ஆம்னி பஸ்சை டிரைவர் ஓட்டிச்சென்றதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
மதுரையில் இருந்து சென்னை வந்தபோது சாப்பிட்டு கொண்டே ஆம்னி பஸ்சை ஓட்டிய டிரைவர்
Published on

மதுரை,

மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து 40 பயணிகளுடன் ஆம்னி பஸ் ஒன்று சென்னைக்கு புறப்பட்டது. சிறிது தூரம் வந்த நிலையில் ஆம்னி பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவர், பஸ்சை ஓட்டிக்கொண்டே, ஸ்டியரிங் நடுவில் உணவு பார்சலை வைத்து சாப்பிட தொடங்கினார். ஆபத்தான முறையில் பஸ்சை இயக்கிய டிரைவரை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது பயணி ஒருவர், சாப்பிட்டுவிட்டு அதன் பின்பு பஸ்சை ஓட்டலாமே? என டிரைவரிடம் கேட்டார். அதற்கு அவர், நேரமில்லாததால் பஸ்சை ஓட்டிக்கொண்டே சாப்பிடுவதாகவும், இது பழக்கப்பட்ட ஒன்றுதான் என்றும் கூறுகிறார். இந்த காட்சிகளை பஸ்சில் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. சாப்பிட்டுக்கொண்டே ஆம்னி பஸ்சை டிரைவர் ஓட்டிச்சென்றதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com